ஏன் முடக்கப்பட்ட தளங்கள் ?
பொதுவாக அரசாங்கம் தான் இந்த வலை தளங்களை முடக்கும் அதிகாரம் பெற்றவை . பொதுவாக தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு சில தளங்களை , ஏன் சமூக வலைதள கணக்குகளை கூட முடக்கம் செய்கின்றன. ஆனால் இது மட்டும் காரணம் அல்ல . காப்புரிமம் காரணமாகவும் சில வலைதளங்கள், சமூக வலைதள கணக்குகள் முடக்கப்படும் .
முடக்கப்பட்ட தளங்களை திறப்பது சரியா?
சரியா தவறா என்பது ஒரு நீண்ட விவாதம் . நீங்கள் இந்த முடக்கப்பட்ட தளங்களை திறந்து தேச விரோதம் அல்லது குற்றம் சம்பந்தப்பட்ட செயல்களை செய்யாதவரை கிட்டத்தட்ட சரிதான் . அதாவது உங்களுக்கு பெரிதாக எந்த பிரச்சினையும் இல்லை.
சரி , எப்படி முடக்கப்பட்ட தளங்களை திறப்பது ?
VPN – Virtual Private Network எனும் மென்பொருள் மூலம் இதை சுலபமாக செய்யலாம். இந்த செயலி நீங்கள் வேறு நாட்டில் இருப்பது போல போலியான பிம்பத்தை உருவாக்குவதன் மூலம் நீங்கள் முடக்கப்பட்ட தளங்களை காணலாம் . எப்படி என்றால் , இந்த தளங்கள் இந்தியாவில் மட்டும் தான் முடக்கப்பட்டுள்ளன. மற்ற நாடுகளில் அல்ல . அதனால் , இது சாத்தியம் தான் .
TOR – The Onion Router எனும் செயலி மூலம் நீங்கள் இலவசமாக இதை செய்யலாம் . இது ஒரு முற்றும் இலவசமான மென்பொருள். விண்டோஸ், ஆண்ட்ராய்டு என அனைத்து தளங்களிலும் இது இயங்கும் . எனினும் இது VPN ஐ விட வேகம் குரைவாக தான் செயல்படும்.
VPN மென்பொருள் TOR ஐ விட வேகமான இணைப்பை ஏற்படுத்தும் . மேலும் இந்த செயலிகள் , இலவசமாகவும் மற்றும் கட்டண சந்தா முறையிலும் சேவையை வழங்குகின்றன. மேலும் சந்தா முறையில் வாங்கிய VPN இணைப்பு, இலவச இணைப்பை விட வேகமாகவும் , சிறப்பாகவும் இருக்கும் .
உங்களது கருத்துக்களை நீங்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் . -நன்றி.